பயமும் பரிதாபமாய் ரங்கநாத் மனைவி மிருதுளா பெங்களூர் நகரக் காவல்துறையிடம் பேசி முடித்ததும், துணை கமிஷனர் ஒருவரை காரில் அழைத்துக்கொண்டு தூரத்தில் இருந்தபடியே சிவராசன் குழுவினர் தங்கியிருந்த தங்களுடைய வீட்டை அடையாளம் காட்டினார். சிவராசன், சுபாவுடன் திருச்சியில் இருந்து தப்பித்த ரங்கன், மற்றும் சுரேஷ் மாஸ்டர் கூட்டணியினர் உள்ளே இருந்தனர்.
கோனனகுண்டேவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை அந்த வீட்டின் மிக அருகில் ஓட்டியிருந்த வீட்டின் குளியல் அறையில் இருந்தபடியே பார்க்க முடியும். துணை கமிஷனர் மற்றும் சில காவல்துறையினருடன் சேர்ந்து அந்த வீட்டைக் கண்காணித்தபடி இருந்தனர். இவர்கள் மறைவிடத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை வெளியே வந்த ரங்கன் பார்த்துவிட்டு பின்வாங்கியபடியே போய்த் தப்பிவிட்டார்.
இரவு முழுக்கச் சுற்றிலும் பாதுகாப்பு படையினருடன் கண்காணிக்கப்பட்டது.
முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். மனைவியைக் காவல்துறையினர் பிடித்துவிடப் பயந்து போன ரங்கநாத் லாட்ஜ்ல் தங்கி விட்டு மறுநாள் கோனனகுண்டேவிற்கு வர பொதுமக்கள் அடையாளம் காட்டி பிடித்துக் கொடுத்து விட்டனர். அவர் சயனைடு விழுங்க முயற்சித்து அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
இரவு பகல் பராமல், குடும்ப வாழ்கை மறந்து மொத்த குழுவினரின் ஒரே லட்சியமான சிவராசனை துரத்திக்கொண்டு வந்தவர்கள் இப்போது எதிரே உள்ளே வீட்டுக்குள் இருக்கிறார் என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டுருந்தனர். உள்ளே உடனடியாக நுழைய அனுமதி கிடைக்கவில்லை.
டெல்லி அதிகார மக்கள் மிகுந்த புத்திசாலி.
இந்த இடம் தான் கடைசி வரைக்கும் புலனாய்வு குழுவில் பணிபுரிந்தவர்களுக்கும், SIT என்று உருவாக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவினரை தலைமைப்பொறுப்பில் இருந்து வழிநடத்திக் கொண்டுருந்த கார்த்திகேயனுக்கு மிகுந்த அயர்ச்சியையும், தர்மசங்கடத்தையும் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.
ஏன் உடனடியாக உத்தரவு வரவில்லை? கொடுக்கப்படவில்லை? என்பதற்கு இரண்டு விதமாக யோசித்துப்பார்க்கலாம்.
தப்பிச்செல்ல சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் நல்லது. மீண்டும் அவர்களைப் பிடிக்க முடியும் என்பது உத்தரவு கொடுக்க வேண்டியவரின் வாதம். அல்லது எதனால் அவர் அவ்வாறு கொடுக்கவில்லை என்பதும் அவரை இயக்கிய சக்தி அப்போது என்னவாக இருந்துருக்கும் என்பது இறந்த ராஜீவ் ஆன்மாவுக்குத் தான் தெரியும்.
காரணம் ஏற்கனவே நடந்த நிகழ்வில் உருவான ஒவ்வொரு நிமிட தாமதமும் வீட்டுக்குள் இருந்த சிவராசன் குழுவினர் சயனைடு சுவைக்க உருவாக்கிய தருணங்கள் அது.
அவர்களைப் பொறுத்தவரையில் உயிரை விடக் கொள்கை பெரிது. கொள்கையை விட இயக்கம் அதன் கட்டுப்பாடு அத்தனை உன்னதமானது. உணர்ந்து என்ன பிரஜோயனம்? ஜனநாயக கட்டுப்பாடு கட்டுக்களைத் தான் போட்டு இருந்தது?
மொத்த குழுவினர்களுகளுடன் பொதுமக்களும் சூழ்ந்து அந்தப் பகுதியே ஒரு விதமான அசாதரணமாகச் சூழ்நிலை நிலவிக்கொண்டுருந்தது. அதிரடியாக உள்ளே நுழைந்து விடலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. பால்கார பெண்மணியை அனுப்ப யோசித்தார்கள்.
அவரையும் உள்ளே பிடித்து வைத்துக்கொண்டால்?
வீட்டின் உள்ளே செல்லும் குழாயில் மயக்க மருந்து கலக்கலாமா? வாதப்பிரதி வாதங்கள். உள்ளுர் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. அவசர ஊர்தி உடனடியாக ஏற்பாடு செய்து இருந்தனர். ஏற்கனவே நடந்துருந்த சயனைடு மரணங்கள் காரணமாக மருத்துவகுழு எல்லாம் வந்து இறங்கிய பிறகு சிபிஐ இயக்குநரும் வந்து சம்பவ இடத்திற்கு வந்து இருந்தார். அத்தனையும் அவர் மேற்பார்வையில் நடந்து கொண்டுருந்தது. அதிரடிப்படையினர் தயாராக இருந்தனர்.
1991 ஆகஸ்ட் 19 அதிகாலை வேளை.
அந்தத் தெருவின் வழியே வந்த டிரக் எதிர்பாரதவிதமாகப் பழுதாகி மிகச் சரியாக அந்த வீட்டுக்கு முன் நின்று கொண்டு அவர்கள் சரி செய்யத் தொடங்க சம்மந்தம் இல்லாத சூழ்நிலையை உள்ளே இருந்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு சுடத் தொடங்கினர். புலனாய்வு குழுவினர் ஓளிந்து இருந்து பார்த்த குளியலைறை நோக்கி குண்டுகள் சரமாரியாக வரத்தொடங்கின.
அப்போது புலனாய்வு குழுவினர் அங்கே இல்லாத காரணத்தால் எவருக்கும் பிரச்சனை இல்லை. அதிரடிப் படையினரும் சுட ஆரம்பிக்க, வீட்டின் உள்ளேயிருந்து வந்து கொண்டுருந்த குண்டுகள் அதிரடிப்படையில் உள்ள ஒரு வீரருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியையும் வந்து தாக்கியது.
அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வந்த கொண்டுருந்த குண்டு முழக்கம் ஓய்ந்தது.
கடந்த 24 மணிநேரமாக வெளியே காத்துக்கொண்டருந்த அதிரடிப்படையினர், உத்தரவு கிடைக்கப்பெற்று காலை ஆறுமணிக்கு நுழைந்தனர். நிகழ்ச்சிகளை தூதர்ஷன் நேரிடையாகப் படம் பிடித்துக்கொண்டிருந்தது. உள்ளே இருந்தவர்கள் அத்தனை பேர்களும் இறந்து கிடந்தனர். சயனைடு சாவு, வெடித்த குண்டுகள், இதற்கு மேலும் சிவராசன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொண்டு இறந்து கிடந்தார்.
சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர்,அம்மன், டிரைவர் அண்ணா,முதல் நாள் வந்து சேர்ந்து இருந்த ஜமுனா. இருந்து கிடந்தனர். கோடியக்கரைக்கு வந்து இறங்கியவர்களும் எட்டுபேர்கள் வந்து இறங்கினர். அதே போல் வேறு வகையில் உருவானவர்கள் ஒன்றிணைந்தவர்கள் உள்ளே இறந்து கிடந்தனர். அதிரடிபடையினர் தாமதமாக உள்ளே நுழைய எல்லாம் முடிந்து போயிருந்தது..
சரியாக அன்றைய தினம் ஆகஸ்ட் 20. ராஜீவ் காந்தியின் பிறந்த தினம்.
மயிரிழையில் அங்கிருந்து வெளியே தப்பியிருந்த ரங்கன் கூட்டணியினர் உத்தரவுபடி வெள்ளைநிறமாக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸியில் சென்னைக்கு வந்துருந்தார். ஆவடியில் தங்கியிருந்தவர் குறிப்பிட்ட டிராவல் ஏஜென்ஸிக்கு வர அங்குக் காத்து இருந்த புலனாய்வு குழுவினரை பார்த்ததும், சாலையில் ஓடத் துவங்க, திரைப்படச் சாகச காட்சி போலத் துரத்திச் செல்ல சயனைடு குப்பியை கடிக்க முற்படும் போது தடுத்து அவர் மூலம் பெற்ற தகவல் தான் சிவராசன் குழுவினர் டேங்கர் லாரியின் உள்புறம் ஒளிந்து தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு சென்றதை கண்டுபிடிக்க முடிந்தது.
இப்போது மொத்தமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
சர்வதேச இன்டர்போல், அயல்நாட்டுத் தூதரங்கள், இ.பி.கோ, தடா, பொடா, தேவைப்டும் ஆவணங்கள், தனி மனித வழிகாட்டல், குழுவினரின் தியாக மனப்பான்மை, உறக்கம் மறந்த நாட்கள் என வெறும் வெள்ளை காகிதம் போல் இருந்த சதிவலையை இதற்குப் பின்னால் நேரிடையாக மறைமுகமாகச் செயல்பட்டவர்கள் என அத்தனை பேர்களையும் ரவுண்டு கட்டி வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியாகி விட்டது.
புலனாய்வு குழுவினரை, செய்திதாள்கள், தனிப்பட்ட அதிகார வர்க்கம், பாராட்டுரைகள் வழங்கியதைப் போல இதற்குப் பினனால் நாம் இப்போது பேச வேண்டியது?
ஏன் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது?
புலனாய்வு குழுவினர் குறித்த மொத்த புரிதல்கள் என்ன?
முழுமையாகக் கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினரும் ஜெயித்து விட்டார்களா?
Feedback/Errata