7. முற்றுகைக்குள் இந்தியா 3

1990 வாக்கில் விடுலைப்புலிகள் வீரத்துடன் போரிட்டு அடுத்தப் பத்தாண்டுகள் பல களங்களை வெற்றிப் பெற்றிருந்தாலும் கூட இந்தக் காலகட்டத்தில் மொத்த உலகமும் வேறொரு பாதையில் தனது பயணத்தைத் தொடங்கியிருந்தது.

1990 ஆம் ஆண்டுக்கு முன்னால் இருந்த உலகளாவிய இராணுவ அரசியல் சூழ்நிலையும் வெகுவாக மாறத் தொடங்கியது. காரணம் அதுவரைக்கும் நீ அந்தப்பக்கமா? இல்லை இந்தப்பக்கமா? என்று இரண்டு தாதாக்கள் இருந்தனர். ஒன்று அமெரிக்கா மற்றொன்று சோவியத் யூனியன்

என்ற இருதுருவங்களில் சோவியத் யூனியன் துருவம் துருப்பிடித்துப் போக உலகமெங்கும் உலகமயமாதல் தராளமயமாக்குதல் என்ற வார்த்தைகளை உலகத்தை ஆட்சி புரிய ஆரம்பித்தது.

அதுவரைக்கும் இலங்கை சந்தையில் அதிக அளவு இறக்குமதியாகிக் கொண்டிருந்த ஜப்பான் பொருட்களை விட இந்தியா இறக்குமதிகள் ஆட்சி புரியத் தொடங்கின. 1990 /1996 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இலங்கையில் இந்தியப் பொருட்கள் ஏறக்குறைய 556 விழுக்காடு கூடியிருந்தது.

ஆக இந்தியாவின் பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.

1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா ஒவ்வொன்றையும் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தத் தொடங்கினார். காரணம் இதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் சந்திரிகா கண்களில் மட்டுமல்ல உடம்பு முழுக்க விரல் விட்டு ஆட்டும் அளவுக்குப் பலமாய் இருந்தனர். இலங்கையை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கும் இந்திய முதலாளிகளைக் கொண்டு காய் நகர்த்த அவருக்குச் சாதகமான அம்சங்கள் வந்து சேரத் தொடங்கியது.

1998 ஆம் ஆண்டு அப்போது இருந்த வாஜ்பாய் அரசுடன் சந்திரிகா அரசாங்கம்

இந்திய இலங்கை சுதந்திர வியாபார ஒப்பந்தம் ((Indo Lanka Bilateral Free Trade Agreement – ILBFTA) கையெழுத்தானது,

இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து இலங்கைக்கோ, இலங்கையிலிருந்து இந்தியாவுக்கோ ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கோ, அல்லது குறைந்தபட்ச வரியோ இரு நாட்டு அரசுகளால் விதிக்கப்பட வேண்டும்.

மேலும் தொழில் நிறுவனங்கள் தொடங்கும்பட்சத்தில் கூடுதல் வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இதே காலகட்டத்தில் உலகமெங்கும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த GATT மற்றத் தராள பொருளாதர ஒப்பந்தங்களுக்கு உறுதுணை புரிந்த நாடுகளுக்கிடையே இருந்த புரிந்துணர்வு ஒப்பந்த விசயங்களும் உதவி புரிந்தன.

2001 ஆம் ஆண்டு முதல் இது போன்ற ஒப்பந்தங்களினால் இரு நாடுகளின் வியாபார வளர்ச்சியும் செங்குத்தாக உயரத் தொடங்கியது. இலங்கையில் தொடர்ந்து முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கும் இந்திய தொழில் அதிபர்களுக்காகவே இலங்கை அரசு 2005 மே மாதம் பெங்களூரில் இலங்கை முதலீட்டு வாரியத்தின் ( BOARD OF INVESTMENT –Bol) சிறப்புக் கிளை ஒன்று தொடங்கப்பட்டது.

சமகாலத்தில் இலங்கைப் பொருட்களைத் தவிர்ப்போம் என்ற கொள்கை அங்கங்கே எழுந்து மறுபடியும் மறைந்து விடுகின்றது. ஆனால் நாம் எந்தந்த நிறுவனங்கள் இலங்கை சந்தையில் வலுவாகக் காலூன்றி இருக்கிறது என்ற பட்டியலை மட்டும் இந்தப் பதிவில் பார்த்து விடுவோம். இது போல இலங்கை நிறுவனங்களின் பட்டியல்களையும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்கள்.

1. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

2. எல்,ஐ,சி,

3. அரவிந்த் மில்

4. பார்தி ஏர்டெல்

5. அன்சால் வீட்டு வசதி நிறுவனம்.

6. சியெட் டயர் நிறுவனம்

7. அப்போல்லோ மருத்துவமனை

8. ஏசியன் பெயிண்ட்ஸ்

9. தாஜ் ஹோட்டல், டாடா டீ, வி.எஸ்.என்.எல் டாடா குழுமம்

10, ஸ்வீடன் நாட்டின் ஹோல்சிம் சிமெண்ட் (ஏ.சி.சி. மற்றும் குஜராத்

அம்புஜா சிமெண்ட்டின் புதிய முதலாளி)

11. ராம்கோ குழுமம்

12. அல்ட்ரா டெக் சிமெண்ட், கார்பன் ப்ளாக் தொழிற்சாலை (பிர்லா குழுமம்)

13. இந்தியன் ஆயில்

14. மகேந்திரா அண்ட் மகேந்திரா மோட்டார் வாகன நிறுவனம்

15. பிராமல் கண்ணாடி நிறுவனம்

16. கேடிலா மருந்துக் கம்பெனி

17. எக்ஸைடு பேட்டரி

18. பிரிட்டானியா பிஸ்கெட் நிறுவனம்

19. டி.வி.எஸ் குழுமம்

20. ஜெட் ஏர்வேஸ்

21. யு.டி.ஐ. நிறுவனம்

22. சஹாரா ஏர்வேஸ்

23. CAIRN INDIA ( PETROL COMPANY)

இது தவிர உள்ள சிறிய நிறுவனங்களை இந்தப் பட்டியலில் கொண்டுவரவில்லை. இந்தியாவில் உள்ள இலங்கை நிறுவனங்கள்.

1. MAS HOLDINGS ஆயத்த ஆடைகள்

2. தம்ரோ (DAMRO கட்டில், நாற்காலிகள்

3. Ceylon Chocolates Pvt. Ltd., சாக்லேட் நிறுவனம்

4. Maliban பிஸ்கட் நிறுவனம்

5. Edina சாக்லேட் நிறுவனம்

6. Keels – ஆயதத உணவுகள்

7. Milesna – தேயிலைப் பொருட்கள்

8. DSI – ரப்பர் செருப்புகள் ரப்பர் பொருட்கள்

9. Gloves Lanka Pvt.Ltd – பின்னல் கையுறைகள்

10. Lanka Walltiles – செராமிக் டைல்கள்

11. Eclar Toys – மரப் பொம்மைகள்

12.Tandon Associated Lanka Pvt.Ltd – Dual Inline Memory Modules

13. Skyspan Asia Ltd – substitute to conventional roofing systems

14. Tantri Trailers – Trailers / Long Vehicles

15. Link Natural – ஆயுர்வேத மருந்துகள்

16. Sri Lankan Airways

(பட்டியல்கள் சுருக்கப்பட்டுள்ளது)

இது போன்ற நிறுவனங்களின் மூலம் 1998 ஆம் ஆண்டு இலங்கையில் இந்தியாவின் முதலீடு 40 லட்சம் அமெரிக்க டாலர். இதுவே 2006 ஆம் ஆண்டில் 1500 லட்சம் அமெரிக்க டாலர்.

இப்போது சொல்லுங்க?

ஈழத்திலிருந்து எடுத்துக் கொண்டிருந்த லாபங்கள் முக்கியமா? இல்லை, ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் இந்தியாவிற்கு முக்கியமா?

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *