1. வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலங்கை சுதந்திர பெற்ற காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கள ஆட்சியாளர்களால் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு ஏராளமான துன்பங்கள் உருவானது. தமிழ்த் தலைவர்கள் தொடக்கத்தில் காந்திய வழிப் போராட்டதையே தொடங்கினர். அதுவே ஆயுதப் போராட்டமாக மாறியது. சுதந்திர வேட்கை என்பது ஒரு சிறிய விதை மட்டுமே.

கொழும்புவில் வாழ்ந்த பிரபாகரன் உறவினர்கள் பெற்ற துன்பத்தை மிகச் சிறிய வயதில் கேட்டு பிரபாகரன் தனக்குள்ளேயே சில உறுதிப்பாடுகளை எடுத்துக் கொண்டு அதன்படியே உருவாக்கிக்கொண்ட வேட்கை ஆலமரமாகப் பின்னால் வானளாவ உயர்ந்து நின்றது.

தமிழரசு கட்சியில் இருந்து விலகி ஆசிரியர் தொழில் செய்து கொண்டுருந்த வேணுகோபால் மாஸ்டர் உருவாக்கியது அது. “உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. அடித்துப் பெறுவதே. காந்தியின் அமைதி வழி என்பது சிங்களர்களிடத்தில் எதிர்பார்த்தால் இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் தமிழன் என்பவன் அடிமையே” என்ற அவரின் தராக மந்திரம் இடைவிடாது ஒலிக்க பிரபாகரனின் தனிப்பாதை உருவானது. அதுவே 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கமாக மாறி வளர்ந்து நின்றது. கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களையும் விடுதலைப்புலிகள் இயக்கம் என்ற பெயரைக் கேட்டாலோ, வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயரை நினைத்தாலே அச்சப்பட வைத்தது.

” சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற மக்களின் மீது யாருமே கடைசித் தோல்வியை ஏற்படுத்தி விட முடியாது? இலங்கை தமிழர்களை அழிவுக் குவியலாக மாற்றி விடலாம். ஆனால் நிரந்தர அடிமையாக மாற்றி வைக்க முடியாது”

உணர்ந்தவர்கள் ஜெயிக்கக்கூடியவர்கள்.

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *